- மும்பையில் உள்ள மஸாகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை தொடங்கி வைத்துள்ளது.
- 1969 முதல் 2003 வரை இந்திய கடற்படையில் செயல்பாட்டில் இருந்த கல்வாரி வகுப்பு கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் கப்பலினுடைய பெயரே ஸ்கார்பீன் வகுப்பின் மூன்றாவது கப்பலான இதற்கும் சூட்டப்பட்டுள்ளது.
- ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களே இந்தியக் கடற்படையின் முதல் நவீன வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் தொடராகும்.
- திட்டம் 75-ன் கீழ் பிரெஞ்ச் நிறுவனமான DCSN-ன் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையிலுள்ள மஸாகான் கப்பல் கட்டுந்தளத்தில் 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
- இதற்கு முன் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள முதல் இரு ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களாவன :
- ஐ.என்.எஸ். கல்வாரி
- ஐ.என்.எஸ். கந்தேரி
- 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களில் இன்னும் வெளியிடப்பட வேண்டிய பிற மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களாவன:
- ஐ.என்.எஸ். வேலா (Vela)
- ஐ.என்.எஸ். வாகிர் (Vagir)
- ஐ.என்.எஸ். வக்ஸ்ரீ (Vagshree)
- இவை கட்டமைக்கப்பட்டு படிப்படியாக 2020-ல் செயல்பாட்டிற்கு வரும்.
ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளின் அடக்க குறிப்புகள்
- ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களானது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti-ship missile) பொருத்தப்பட்ட டீசல்-எலக்ட்ரிக் எஞ்சினுடைய தாக்குதல் கப்பல்களாகும்.
- எதிரிகளின் ரேடாரில் புலப்படாமல் மறைய வல்ல தொழில்நுட்பமும் (Stealth technology), துல்லிய வழிகாட்டு ஆயுதங்களுடன் முடக்குத் தாக்குதல்களை தொடுக்கவல்ல திறனும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உள்ளது.
- 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளில் முதல் 4 நீர்மூழ்கிகள் டீசல்-எஞ்சினுடைய வழக்கமான (Conventional) கப்பல்களாகும்.
- கடைசி இரு கப்பல்கள் காற்று உந்துவிசை அமைப்பை (Air Independent Propulsion) கொண்டவையாகும். இதனால் இவை குறிப்பிட்ட நாட்கள் கழித்து நீரின் மேற்பரப்பிற்கு வந்து ஆக்ஸிஜன் பெற்று தன் மின்கலன்களை மீள்நிரப்பம் செய்ய தேவையில்லை. நீடித்த நாட்களுக்கு மூழ்கியபடியே இருக்க இயலும்.