TNPSC Thervupettagam
January 17 , 2018 2506 days 803 0
  • இந்தியப் பிரதமரும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூவும் இணைந்து அகமதாபாத்தில் ‘ஐ கிரியேட்‘ மையத்தினை தொடங்கி வைத்தனர்.
  • இது தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் (International Centre for Entrepreneurship and Technology – iCreate) என்றழைக்கப்படுகிறது.
  • இந்த மையமானது தொழில்முனைவோர்களுக்கு நிதியுதவி, வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்பம் வழங்கல் ஆகியவற்றின் மூலமாக அவர்கள் வளர்ச்சி பெறுவதை ஊக்கமளிக்கும் வகையில் தொடங்கப்பட்டிருக்கிறது.
  • ‘தொடங்கிடு இந்தியா‘ (Start-Up India) திட்டத்தினை வளர்ச்சியடையச் செய்வதற்கான தனிப்பட்ட ஊக்குவித்தல் மையமாகவும் இது விளங்குகிறது.
  • தற்போதைய தொழில் முனைவு உலகத்தில், ஒரு தனிநபர் முறைப்படியான திறனை அடைவதற்காக 13 வார கால பாடத் திட்டத்தினை ‘ஐ கிரியேட்‘ வழங்குகிறது.
  • பாடத்திட்ட காலத்தின் முடிவில் பயிற்சியாளர்களிடம் இருந்து பெறப்படும் சிறந்த துணிவான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு 50000 ரூபாய் வரையிலான நிதியுதவி அளிக்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்