இந்தியப் பிரதமரும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூவும் இணைந்து அகமதாபாத்தில் ‘ஐ கிரியேட்‘ மையத்தினை தொடங்கி வைத்தனர்.
இது தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் (International Centre for Entrepreneurship and Technology – iCreate) என்றழைக்கப்படுகிறது.
இந்த மையமானது தொழில்முனைவோர்களுக்கு நிதியுதவி, வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்பம் வழங்கல் ஆகியவற்றின் மூலமாக அவர்கள் வளர்ச்சி பெறுவதை ஊக்கமளிக்கும் வகையில் தொடங்கப்பட்டிருக்கிறது.
‘தொடங்கிடு இந்தியா‘ (Start-Up India) திட்டத்தினை வளர்ச்சியடையச் செய்வதற்கான தனிப்பட்ட ஊக்குவித்தல் மையமாகவும் இது விளங்குகிறது.
தற்போதைய தொழில் முனைவு உலகத்தில், ஒரு தனிநபர் முறைப்படியான திறனை அடைவதற்காக 13 வார கால பாடத் திட்டத்தினை ‘ஐ கிரியேட்‘ வழங்குகிறது.
பாடத்திட்ட காலத்தின் முடிவில் பயிற்சியாளர்களிடம் இருந்து பெறப்படும் சிறந்த துணிவான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு 50000 ரூபாய் வரையிலான நிதியுதவி அளிக்கப்படவிருக்கிறது.