TNPSC Thervupettagam

ஐ.ஜல் நீர சுத்திகரிப்பு நிலையம்

December 20 , 2017 2561 days 909 0
  • தெலுங்கானா மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில், போடிச்சன் பள்ளி மற்றும் சங்கரம்பேட் ஆகிய இரு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் சென்னையில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டு துணை தூதரகம் கையெழுத்திட்டுள்ளது.
  • இப்பகுதிகளில் இருக்கும் நிலத்தடி நீர் அதிக புளூரைடு மற்றும் அதிக உப்புத் தன்மை கொண்டது.
  • தொலை தூர கண்காணிப்பு வசதிகள், கழிவு நீர் மேலாண்மை அமைப்பு, சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய சூரிய மின் தகடுகள் போன்றவை அமைக்கப்பட்டு குறைந்த செலவில் இந்நிலையங்கள் இயங்கும்.
  • இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பொதுவாக “ஐ-ஜல்“ என்று ஹிந்தி மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. ‘ஐ-ஜல்‘ என்ற சொல்லுக்கு “என் நீர்“ என்று பொருள்.
  • பொது மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்த மிகப் பெரிய கடைமட்டத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தத்தில் சென்னையில் அமைந்திருக்கும் ஜப்பானின் தலைமை துணைத் தூதரும், பாதுகாப்பான நீர் இணையம் என்ற அரசு சாரத லாப நோக்கற்ற நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
  • சென்னையில் அமைந்திருக்கும் ஜப்பான் நாட்டின் துணைத் தூதரகமானது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றிற்கு பொதுவானதாகும். 1990ஆம் ஆண்டு துவங்கி இது போன்ற பல திட்டங்களுக்கு இந்த துணைத் தூதரகம் ஆதரவளித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்