ஐ.நா.அமைதி காப்பு படையின் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்
November 19 , 2017 2711 days 951 0
ஐ.நா. அமைதி காப்பு படையின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு (UN Peacekeeping Defence Ministerial -UNPKDM) அண்மையில் கனடாவின், வான்கூவர் நகரில் நடைபெற்றது.
இதனுடைய கடைசி அமைச்சர்கள் மாநாடு 2016ல் செப்டம்பரில் லண்டனில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்களித்து வரும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிரிக்க யூனியனும், நேட்டோ அமைப்பும் கலந்து கொண்டன.
இந்த மாநாட்டில் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு, , பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சுரண்டலைக் கையாளுதல் (Tackling Sexual Exploitation and Abuse – SEA), அமைதிகாப்பு மற்றும் விரைவான வளர்ச்சியை அதிகரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
ஐ.நா.வின் அமைதிகாப்புப் படையில் உள்ள ஐ.நா. உறுப்பு நாடுகளுடைய பங்களிப்பினை மதிப்பாய்வு செய்வதற்காகவும், ஐ.நா. அமைதிகாப்புப் படையின் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கான நடப்பு மற்றும் எதிர்கால தேவைகளை அடைய உறுப்பு நாடுகளின் பிரத்யேக உறுதிமொழியை உறுதி செய்வதற்காகவும் ஒருங்கிணைக்கப்படுவதே பாதுகாப்பு அமைச்சர்களுக்கான UNPKDM மாநாடாகும்.