ஏழு கார்வால் ரைபிள் காலாட்படை பட்டாலியன் படைக்குழுவைக் (Garhwal Rifles Infantry Battalion Group) கொண்ட இந்திய இராணுவப் படையானது தன் தன்னலமற்ற சேவைக்காக (Selfless service) ஐ.நா.வின் பதக்கத்தைப் (United Nations Medal) பெற்றுள்ளது.
இப்படையானது தெற்கு சூடான் நாட்டில், தெற்கு சூடானிற்கான ஐ.நா.வின் அமைதி காப்புத் திட்டத்தின் (United Nations Mission in South Sudan-UNMISS) ஓர் பகுதியாகும்.
இந்தியாவானது தெற்கு சூடானிற்கான ஐ.நா.வின் அமைதி காப்புத் திட்டத்திற்கான படைகளின் பங்களிப்பின் அடிப்படையில், 2,237 படைகளைக் கொண்ட மிகப்பெரிய படைப் பங்களிப்பாளர் (Highest troop Contributor) நாடாகும்.