- ஜெனீவாவின் ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் தூதராகவும் பங்கஜ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் அமந்தீப் கில்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு
- ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடானது (CD - Conference on Disarmament) முறைப்படியான ஐக்கிய நாடுகளின் (UN - United Nations) அமைப்பு அல்ல.
- இது ஐ.நா. பொதுச் செயலாளரின் தனிப்பட்ட பிரதிநிதி மூலம் ஐ.நா. சபையுடன் இணைக்கப்பட்டது.
- பலதரப்பு ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தையை நடத்த இந்த பலதரப்பு மன்றானது 1979-ல் சர்வதேச சமுதாயத்தால் உருவாக்கப்பட்டது.
- ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள பலாஸ் டேஸ் நேஷன்ஸ்-ஐ இது தலைமையகமாகக் கொண்டுள்ளது.