TNPSC Thervupettagam

ஐ.நா. உலக உணவு திட்டம் - சுவீடன்

February 5 , 2018 2484 days 979 0
  • அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக உணவு திட்டத்திற்கு 370 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு சுவீடன் அரசானது ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்புடன் (UN World Food Programme - WFP) முக்கியத்துவ கூட்டிணைவு ஒப்பந்தத்தை (Strategic Partnership Agreement) மேற்கொண்டுள்ளது.
  • 2018 முதல் 2021 வரையிலான நான்காண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சுவீடனின் இந்த நிதிப் பங்களிப்பானது WFP-ன் முக்கியத்துவ கூட்டு ஒப்பந்தத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட நிதிப் பங்களிப்புகளில் மிகப்பெரிய அளவிலான ஒன்றாகும்.

உலக உணவுத் திட்டம்

  • உலக உணவுத் திட்டமானது உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தால் (FAO-Food And Agriculture Organisation ) 1961ல் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் ரோமில் உள்ளது.
  • உலக உணவுத் திட்ட நிறுவனமானது ஐ.நா.வின் உணவு சார்ந்த அம்சங்களில் துணைபுரியும் நிறுவனமாகும்.
  • உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நிறுவனமான இது உலக அளவில் வறுமை மற்றும் பட்டினியைப் போக்குவதையும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் முக்கியப் பணிகளாக கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்