பாதுகாப்பான, முறையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குடியேற்றத்திற்கான உலகளாவிய உடன்படிக்கையானது இந்தியா உள்ளிட்ட 164 நாடுகளால் சர்வதேச அரசுகளுக்கிடையேயான மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த மாநாடானது மொராக்கோவின் மரக்கேஷ் என்ற இடத்தில் ஐ.நா. பொதுச் சபையின் ஆதரவுடன் நடைபெற்றது.
இந்த மாநாடு மொராக்கோவின் அரசால் நடத்தப்பட்டது.
இது சர்வதேச குடியேற்றத்தின் பரந்த அளவிலான பரிமாணங்களை உள்ளடக்கிய, அரசுகளுக்கிடையேயான முதல் ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவால் எதிர்க்கப் பட்டாலும் அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது அனைத்து அரசுகளின் இறையாண்மையையும் முழுமையாக மதிக்கும் ஒரு கூட்டுறவு கட்டமைப்பு கொண்ட மற்றும் கட்டாயமாக்கப்படாத ஒரு ஒப்பந்தமாகும்.