இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் 1945 ஆம் ஆண்டு சர்வதேச அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
June 26, 1945 அன்று சான் பிரான்சிஸ்கோவில் ஐநா சாசனம் கையெழுத்திடப்பட்டது. இந்த சாசனத்தில் 51 நாடுகள் கையெழுத்திட்ட பின்னர் அக்டோபர் 24, 1945ல் ஐநா அமைப்பானது செயல்முறைக்கு வந்தது.
ஐ.நா தினமானது 1945ல் ஐநா சாசனம் நடைமுறைக்கு வந்ததை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி 1948 ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
ஐநா வின் தலைமையகம் – நியூ யார்க்
உறுப்பினர்களின் எண்ணிக்கை – 193. கடைசியாக தெற்கு சூடான் உறுப்பினராக சேர்ந்தது.
இதன் அலுவலக மொழிகள் - அராபிக், ஆங்கிலம், பிரஞ்சு, சீனமொழி, ஸ்பானிஸ், ரஷ்யன்.