TNPSC Thervupettagam

ஐ.நா தணிக்கையாளர்கள் குழுவின் துணைத் தலைவர்

December 15 , 2018 2091 days 762 0
  • நியூயார்க்கில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தணிக்கையாளர்கள் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரான (CAG - Comptroller and Auditor General) ராஜிவ் மெஹ்ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் CAG மீண்டும் தணிக்கையாளர்கள் குழுவின் தலைவராக (2019) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அடுத்த கூட்டம் 2019-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும்.
ஐக்கிய நாடுகளின் தணிக்கையாளர்கள் குழு
  • இது 1959ல் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானத்தினால் நிறுவப்பட்டது.
  • இதன் உறுப்பினர்கள் பொறுப்பான தணிக்கை முறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தணிக்கை முறைகளில் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இது ஐ.நா. மற்றும் சர்வதேச அணுசக்திக் கழகம் போன்றவற்றின் சிறப்பு நிறுவனங்களின் வெளிப்புற தணிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா. தணிக்கை வாரியத்தின் தணிக்கையாளர்கள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
  • தற்போது 11 நாடுகளை உள்ளடக்கிய இது ஐக்கிய ராஜ்ஜியத்தின் CAGயால் தலைமை தாங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்