TNPSC Thervupettagam
June 9 , 2019 1877 days 663 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் நிலநடுக்கோட்டு விருதை தெலுங்கானா மாநில தக்காண வளர்ச்சி சமூகத்தின் பெண்கள் அமைப்புகள் பெற்றுள்ளன.
  • இந்தப் பெண் விவசாயிகள் சங்காரெட்டி மாவட்டத்தின் மிக அதிகமாக மழை பெய்யும் கிராமங்களில் தங்களது சொந்த விதை வங்கிகள் ஏற்படுத்திக் கொண்டும் திணை வகைகளைப் பயிரிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
  • கால நிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றிற்கு உள்ளூர் சார்ந்த மற்றும் இயற்கை முறையிலான தீர்வுகளை அளித்து தலைசிறந்த ஆதாரமாக விளங்குவதற்காக இந்த அமைப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பற்றி
  • இந்த விருது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட அமைப்பிற்குள் செயல்படும் நிலநடுக்கோட்டு முன்னெடுப்பினால் வழங்கப்படுகின்றது.
  • இந்த விருது பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாடு ஆகியவற்றின் மூலம் வறுமையைக் குறைக்கும் சமூக முயற்சிகளுக்கு உலக அளவில் அங்கீகாரத்தை அளிப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்