TNPSC Thervupettagam

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் – 6 உறுப்பு நாடுகள்

January 6 , 2018 2386 days 760 0
  • ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர்கள் தகுதியில் ஆறு நாடுகள் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • அந்த ஆறு நாடுகளாவன
    • நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள கினியா
    • ஐவரி கோஸ்ட்
    • குவைத்
    • பெரு
    • போலந்து
    • நெதர்லாந்து
  • நிரந்தர உறுப்பினரல்லாத தகுதிக்கான இடங்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடுகள் ஐ.நா.பொது அவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • இந்த வகையில் 2017-ன் டிசம்பர் 31-ஆம் தேதியோடு எகிப்து, இத்தாலி,  ஜப்பான்,  செனகல்,  உக்ரைன்,  உருகுவே ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பதவிக் காலம் முடிந்து வெளியேறியுள்ளன.
  • ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • அவற்றில் நிரந்தர உறுப்பினர்களாக, வீட்டோ அதிகாரத்தோடு ஐந்து நாடுகள் உள்ளன.
  • அவையாவன
    • பிரிட்டன்
    • சீனா
    • பிரான்ஸ்
    • இரஷ்யா
    • அமெரிக்கா
  • பிற 10 நாடுகளும் நிரந்தர உறுப்பினரல்லாத வீட்டோ அதிகாரமில்லாத நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்