மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமான வாக்குகள் பெற்று ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC-United Nations Human Rights Council) உறுப்பினர் இடத்தை பாகிஸ்தான் வென்றுள்ளது.
2018 லிருந்து 2020 வரை 3 ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்கள் கொண்ட இந்த அவையின் தேர்தலானது எளிய பெரும்பான்மைத் தேவையோடு இரகசிய வாக்கு முறையில் (Secret Ballot) நடத்தப்படும்.
ஆசிய- பசுபிக் பிராந்தியத்தின் நான்கு இடங்களுக்கு ஐந்து நாடுகள் போட்டியிட்டன. பாகிஸ்தானோடு, ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலானது (UNHRC – United Nations Human Rights Council) உலகெங்கிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஐ.நா வின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒர் சர்வதேச அமைப்பாகும்.
இவ்வமைப்பிலுள்ள 47 இடங்களுக்கு உறுப்பு நாடுகள் 3 ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகளின் பிராந்திய குழுக்களுக்கிடையே இந்த 47 இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
ஆப்ரிக்காவிற்கு 13 இடங்கள்
ஆசியாவிற்கு 13 இடங்கள்
கிழக்கு யூரோப்பாவிற்கு 6 இடங்கள்
லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் குழு (GRULAC – Latin America and Caribbean Groups) - 8 இடங்கள்
மேற்கு ஐரோப்பா மற்றும் பிற குழுக்கள் (WEOG – Western European and other Groups) – 7 இடங்கள்