TNPSC Thervupettagam

ஐ.நா.வின் சமூக-பொருளாதார, கலாச்சாரக் குழு - பிரீத்தி சரண்

December 8 , 2018 2098 days 695 0
  • முன்னாள் மூத்த இந்திய அரசுத் தூதரான பிரீத்தி சரண் ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சமூக-பொருளாதார கலாச்சார உரிமைக் குழுவிற்கு (CESCR - Committee on Economic, Social and Cultural Rights) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 4 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
  • 18 உறுப்பினர்கள் கொண்ட வல்லுநர் குழுவிற்கான இத்தேர்தலானது ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் நடத்தப்பட்டது (ECOSOC - UN’s Economic and Social Council).
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழு
  • CESCR ஆனது 1985 ஆம் ஆண்டில் ECOSCO ஆல் ஏற்படுத்தப்பட்டது.
  • CESCR ஆனது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும்.
  • CESCR சந்திப்பானது ஒவ்வொரு ஆண்டும் நான்கு வாரங்களுக்கு ஜெனீவாவில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்