TNPSC Thervupettagam

ஐ.நாவின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவிப்பு

September 27 , 2018 2154 days 639 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதானது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்தியாவில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக கொள்கைகளுக்கான தலைமைப் பிரிவில் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவத்துடன் ஐநா சபையானது மோடியை அங்கீகரித்துள்ளது.
  • சுற்றுச்சூழல்களில் மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டு வந்த உலகின் ஆறு பேருக்கு சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது வழங்கப்படுகிறது.
  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மோடி ஆகிய இருவரும் கொள்கை தலைமைத்துவ பிரிவில் கூட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
  • நீடித்த மற்றும் நிலையான ஆற்றல் பயன்பாட்டில் தலைமை வகித்ததற்காக ‘’தொழில் முயற்சி தொலைநோக்கு பார்வைக்கான விருது’’ கொச்சியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விமான நிலையமானது உலகின் முதலாவது முழுவதும் சூரிய ஆற்றலால் இயங்குவதாகும்.
  • மற்ற வெற்றியாளர்கள்
சுற்றுச்சூழல் மற்றும் பூர்வகுடிகளின் உரிமைகள் பாதுகாவலரான ஜோன் கார்லிங் 20 வருடங்களுக்கு மேலாக பூர்வ குடிமக்களின் சுற்றுச்சூழல் உரிமைகளை மற்றும் நிலங்களை பாதுகாத்ததற்காக
சீனாவின் ஜீஜியாங்-இன் கிராமப்புற பசுமை மறுமலர்ச்சி திட்டம். கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் மாசுபட்ட பெரும் பகுதியை மாற்றியமைத்ததற்காக
பியான்ட் மீட் மற்றும் இம்பாசிபுல் ஃபுட் நிறுவனங்கள்

அறிவியல் மற்றும் புத்தாக்க வகை


Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்