TNPSC Thervupettagam

ஐ-பத்திரம் (Bond - I)

August 25 , 2018 2285 days 767 0
  • உலக வங்கியானது முதல் பொதுவான சங்கிலித் தொடர் பத்திரமான ஐ-பத்திரத்தை (Bond-I) உருவாக்கியுள்ளது. இது சங்கிலித் தொடர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு,  ஒதுக்கப்பட்டு, மாற்றப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படுகிறது.
  • Bond-I என்பது சங்கிலித் தொடரால் வழங்கப்படும் புதிய கடன் கருவியின் (Blockchain Offered New Debt Instrument) சுருக்கமாகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சுற்றுலாப் புகழ்பெற்ற போண்டி கடற்கரையையும் குறிக்கிறது.
  • இந்த பத்திரத்திலிருந்து கிடைக்கும் நிதிகள் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்குச் (SDI – Susutainabale Development Initiative) செல்லும்.
  • ஐ-பத்திரமானது ஆஸ்திரேலியன் டாலர்களில் குறிக்கப்படும் ஈத்தேரியம் சங்கிலித் தொடர் பத்திரமாகும். ஆஸ்திரேலியாவின் உள்ளூர் பணத்தில் வழங்கப்பட்ட வெளிநாட்டு பத்திரங்களைக் குறிக்கும் கங்காரு பத்திரமாக இது குறிக்கப்படுகிறது.
  • உலக வங்கியானது ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கியை (ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி) இந்த பத்திரத்திற்கான ஒரே ஏற்பாட்டாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த பத்திரமானது இரண்டு ஆண்டு காலத்தை முதிர்ச்சி காலமாக உடையது மற்றும் இதன் வெளியீட்டிற்குப் பிறகு இது 100 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலரைப் (73.16 மில்லியன் அமெரிக்க டாலர்) பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்