TNPSC Thervupettagam
March 23 , 2021 1253 days 609 0
  • எதிரி நாட்டு செயற்கைக் கோள்களைக் கண்காணிக்கவும், ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கண்டறியவும், இந்தியப் பெருங்கடல் பகுதியை வரைபடமிடவும் உதவும் ஐஎன்எஸ் துருவ் என்ற கப்பல் இந்தியக் கடற்படையில் இணையவுள்ளது.
  • விசாகப்பட்டினத்திலுள்ள “இந்துஸ்தான் ஷிப்யார்ட்” நிறுவனத்தின் கப்பல்கட்டும் தளத்தில் இக்கப்பல் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இக்கப்பல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) மற்றும் இந்தியக் கப்பற்படையின் உதவியுடன் இந்தியாவின் யுக்திசார் படைகள் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம், சீனா, ரஷ்யா மற்றும் பிரான்சு ஆகிய P5 நாடுகளைத்  தவிர இத்தகைய கப்பலைக் கெண்டுள்ள ஒரே நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியாவின் பெருங்கடல் பகுதிகளை கண்காணிப்பதற்கான வசதியை மேம்படுத்த இக்கப்பல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்