ஐக்கிய அரபு அமீரகமானது, ரஷித் என்று பெயரிடப்பட்ட தனது முதல் சந்திர உலாவிக் கலத்தினை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவ உள்ளது.
இந்த உலாவிக் கலமானது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானின் ispace ஹகுடோ-R என்ற தரையிறங்கும் கலத்தின் மூலம் சந்திர மேற்பரப்பை அடையும்.
இந்த சந்திர ஆய்வுப் பணி வெற்றியடைந்தால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் ஆகியவை சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறக்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அடங்கியப் பட்டியலில் இடம் பெறும்.
அதன் இலக்கு சந்திரனின் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள கனவுகளின் ஏரி என்று அழைக்கப் படும் லாகஸ் சோம்நியோரம் என்ற ஏரியாகும்.
ரஷித் உலாவிக் கலமானது சந்திரனின் மேற்பரப்பு, நிலவின் மேற்பரப்பில் உள்ள இயக்கம் மற்றும் நிலவில் உள்ள துகள்களுடன் வெவ்வேறு மேற்பரப்புகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்யும்.
துபாயின் முன்னாள் அரசர் ஷேக் ரஷித் பின் சயீத் அல் மக்தூமின் நினைவாக இந்தக் கலத்திற்கு இப்பெயரிடப் பட்டது.