TNPSC Thervupettagam

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்வெளி வீரர்கள்

September 6 , 2018 2272 days 662 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, பயணம் மேற்கொள்ளச் செய்வதற்காக, தனது முதல் இரண்டு விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.
  • அந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஹசா அல்மன்சௌரி மற்றும் சுல்தான் அல் நயடி ஆவர். அவர்களின் பயணம் அடுத்த வருடம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகமானது, 2021 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய்கிரக சுற்றுவட்டப் பாதைக்கு ‘ஹோப்’ என்கிற ஆளில்லா விண்வெளி ஆய்வுக் கலத்தை அனுப்புவதன் மூலம், அவ்வாறு அனுப்பிய முதல் அரபு நாடாகத் திட்டமிட்டுள்ளது.
  • ஐக்கிய அரசு அமீரகமானது தனது நீண்ட நாள் திட்டமாக, செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வை பிரதிபலிக்கும் வண்ணம் ‘அறிவியல் நகரம்’ ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2117-ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் முதல் மனித குடியேற்றங்களை உருவாக்கவும் அது திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்