ஐக்கிய அரபு அமீரகமானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, பயணம் மேற்கொள்ளச் செய்வதற்காக, தனது முதல் இரண்டு விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.
அந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஹசா அல்மன்சௌரி மற்றும் சுல்தான் அல் நயடி ஆவர். அவர்களின் பயணம் அடுத்த வருடம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமானது, 2021 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய்கிரக சுற்றுவட்டப் பாதைக்கு ‘ஹோப்’ என்கிற ஆளில்லா விண்வெளி ஆய்வுக் கலத்தை அனுப்புவதன் மூலம், அவ்வாறு அனுப்பிய முதல் அரபு நாடாகத் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரசு அமீரகமானது தனது நீண்ட நாள் திட்டமாக, செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வை பிரதிபலிக்கும் வண்ணம் ‘அறிவியல் நகரம்’ ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2117-ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் முதல் மனித குடியேற்றங்களை உருவாக்கவும் அது திட்டமிட்டுள்ளது.