TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் அயலகத் தணிக்கையாளர்களின் குழுவின் தலைவர் – கிரிஷ் சந்திர முர்மு

March 13 , 2021 1231 days 577 0
  • இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகளின் அயலகத் தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 1959 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அயலகத் தணிக்கையாளர்களின் குழுவை ஏற்படுத்தியது.

குறிப்பு

  • கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 என்ற சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் உருவாக்கப்பட்ட பின்பு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
  • தற்பொழுது, இவர் பின்வரும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் அயலகத் தணிக்கையாளராக உள்ளார்.
    • உலக சுகாதார அமைப்பு (2020-2023)
    • உணவு மற்றும் வேளாண் அமைப்பு (2020 – 2025)
    • நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் (2020 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்