ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகசபை தேர்தல் - இந்தியா
April 30 , 2018 2401 days 696 0
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைகளுக்கான தேர்தல்களில் ஆறு இடங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் ஐந்து இடங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த தேர்தல்களில் இந்தியா நான்கு ஐ.நா. அமைப்புகளின் நிர்வாக அமைப்புகள், மூன்று ஆணையங்கள், ஒரு குழு ஆகியவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அரசு சாரா நிறுவனங்களுக்கான குழுவின் தேர்தலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
ஏப்ரல் 16, 2018 முதல் 2021ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் பதவிக் காலத்திற்கு இந்தியா பலத்த பாராட்டுக்களோடு தேர்ந்தெடுக்கப்பட்டது.
சமூக வளர்ச்சி ஆணையத்திற்கு ஆசிய-பசுபிக் பகுதிகளுக்கான தேர்தலில் இந்தியாவையும் குவைத்தையும் இந்த சபை தேர்ந்தெடுத்தது.
குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் ஆகும்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்திற்கான நிர்வாக அமைப்பு, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி, மற்றும் ஐக்கிய நாடுகள் சேவைத் திட்டங்களுக்கான அலுவலகம் ஆகிய அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று.
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பிற்கு, ஜனவரி 2019 முதல் தொடங்கும் மூன்று ஆண்டு பதவிக்காலம் உடைய பதவிக்கு சபை தேர்ந்தெடுத்த 16 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று.