TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் “குழந்தை இறந்து பிறத்தல்” அறிக்கை

October 15 , 2020 1374 days 627 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள் ஒரு புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு : குழந்தை  இறந்து பிறத்தலின் உலகளாவிய சுமைஎன்பது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையானது யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • குழந்தை இறந்து பிறத்தல் (குறைப் பிரசவம்) என்பது 28 வார கால பிரசவத்தில் உயிர் வாழ்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இறந்து பிறக்கும் ஒரு குழந்தையைக் குறிக்கின்றது.
  • குழந்தை இறந்து பிறக்கும் ஒரு நிகழ்வானது ஒவ்வொரு 16 வினாடிகளுக்கும் ஒருமுறை நடக்கின்றது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்த நிகழ்வுகளில் 84% குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றது.
  • ஐக்கிய நாடுகளில் குழந்தை இறந்து பிறத்தல் குறித்த அறிக்கை வெளியிடப் படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவின் நிலை

  • உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ள 19 மில்லியன் குழந்தை இறந்து பிறத்தலில், இந்தியாவின் பங்கு 0.34 மில்லியன் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தியா மற்றும் நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உலகில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தை இறந்து பிறத்தலைப் பதிவு செய்துள்ளன அல்லது அதற்குக் காரணமாக உள்ளன.
  • இந்தியாவில் குழந்தை இறந்து பிறத்தல் நிகழ்வின் குறைப்பானது கடந்த 20 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.
  • குழந்தை இறந்து பிறத்தல் விகிதமானது 2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2010ல் 2.7% என்ற அளவில் மேம்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்