ஐக்கிய நாடுகள் ஆனது காலநிலை மாற்றம் குறித்த தனது மிகப்பெரிய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இது ”ஐக்கிய நாடுகள் உலகக் காலநிலை ஆய்வு” எனப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமானது இந்த அறிக்கையைத் தயார் செய்வதற்காக வேண்டி 50 நாடுகளைச் சேர்ந்த 1.2 மில்லியன் மக்களிடம் ”மக்களின் காலநிலை வாக்கெடுப்பை” நடத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இதனை ”உலக அவசர நிலையாக” கருதுகின்றனர்.
14 – 18 வயதுடைய 69% மக்கள் ஒரு காலநிலை அவசர நிலை உள்ளதாக கூறுகின்றனர்.
60 வயதிற்கு மேற்பட்ட மக்களில் 58% மக்கள் இதனை ஒப்புக் கொள்கின்றனர்.
அமெரிக்காவில் 65% மக்களும் ஆஸ்திரேலியாவில் 76% மக்களும் ரஷ்யாவில் 51% மக்களும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஆதரவாக உள்ளனர்.
மரங்களின் பாதுகாப்பானது பிரேசிலில் 60% ஆதரவையும் இந்தோனேசியாவில் 57% ஆதரவையும் பெற்றுள்ளது.