TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களுக்கான சர்வதேச தினம் - மே 29

May 29 , 2024 179 days 154 0
  • 1948 ஆம் ஆண்டில் "ஐக்கிய நாடுகள் சபையின் படைப்பிரிவு மேற்பார்வை அமைப்பு" அல்லது UNTSO என பெயரிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை யானது பாலஸ்தீனத்தில் செயல்படத் தொடங்கிய தேதி இதுவாகும்.
  • இந்த நாளில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு நடவடிக்கைகளில் பெரும் பணியாற்றும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிரின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்குக் கௌரமளிக்கும் விதமாகவும், அமைதிக்காக வேண்டி உயிர் நீத்தவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • வன்முறை, விபத்துக்கள் மற்றும் நோய்களின் விளைவாக இன்று வரை 3,900 ராணுவம், காவல்துறை மற்றும் பொதுமக்கள் அமைதி காப்புப் பணியில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் படையினர் பலதரப்பட்டக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்டும், தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் உறுப்பினர் நாடுகளையும் சார்ந்தவர்கள் ஆவர்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Fit for the Future: Building Better Together" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்