TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் ஆழ்கடல் ஒப்பந்தம்

September 4 , 2022 688 days 414 0
  • இது ‘பாரீஸ் பெருங்கடல் ஒப்பந்தம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • இது தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிரியலைக் கையாள்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இது பெருங்கடலைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்திற்கு ஒரு அங்கீகாரம் வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
  • இது ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 168 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பேச்சுவார்த்தை ஆகும்.
  • ஆனால் இது பேச்சு வார்த்தையின் முடிவில் முற்றிலும் தோல்வியடைந்தது.
  • கடந்த ஜூன் மாதத்தில் போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் "கடல்சார் அவசரநிலையினை" அறிவித்தார்.
  • இது பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு அப்பால் இருக்கும் கடல் பகுதியைப் பற்றியது ஆகும்.
  • ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 200 நாட்டிகல் மைல் அல்லது கடலுக்குள் 370 கிமீ தொலைவு வரையில், அதாவது ஆய்வு செய்வதற்கான சிறப்பு உரிமைகளைக் கொண்டிருக்கும் வரையிலான தொலைவில் அந்த மண்டலம் அமைந்துள்ளது.
  • அதற்கு அப்பால் உள்ள நீர் தடைகளற்ற கடல் அல்லது ஆழ்கடல் எனப்படும்.
  • 1982 ஆம் ஆண்டின் கடல்சார் சட்டங்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மீதான உடன்படிக்கையின் (UNCLOS) கீழ் இந்த ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட வேண்டும்.
  • கடல் வளங்கள் மீதான நாடுகளின் உரிமைகளை கடல்சார் சட்டங்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை நிர்வகிக்கிறது.
  • கடல்சார் சட்டங்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை என்பது கடற் கரையில் இருந்து 22 கிமீ வரையிலான கடல் எல்லை வரை, எந்தவொரு நாடும் முழு இறையாண்மையுடன் பிராந்திய உரிமைகளைக் கோரலாம் என்பதை நிறுவ வழி வகுத்ததுடன் 200 நாட்டிகல் கடல் மைல்கள் வரையிலான பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தின் வரம்பு ஆகியவற்றையும் தீர்மானிக்கிறது.
  • இது சர்வதேசக் கடற்பகுதி ஆணையம் மற்றும் பிற மோதல்-தீர்வு வழிமுறைகளையும் உருவாக்கியது.
  • ஆனால், பூமியின் பெருங்கடல் பகுதிகளின் பரந்த நிலப்பரப்புகளின் வளத்தினைப் பாதுகாப்பதற்கான ஒரு ஒப்பந்தம் இதுவரையில் இல்லை.
  • மாறாக, ஒவ்வொரு நாட்டிற்கும் தடையற்ற கடல் பகுதியினை அணுக உரிமை உண்டு
  • இது வணிக நோக்கங்களுக்காக மீன் மற்றும் பிற கடல்சார் உயிரினங்களைப் பிடிப்பதற்காக பெரிய அளவிலான மீன்பிடித்தல் மற்றும் பெரிய வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும்.
  • இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன் உயர் இலட்சியக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
  • இது ‘30×30’ இலக்குகளில் கவனம் செலுத்துவதோடு, 2030 ஆம் ஆண்டிற்குள் 30% கடல் பகுதிகளைப் பாதுகாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்