ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2025
March 27 , 2025 4 days 39 0
‘Mountains and Glaciers; Water Towers’ எனப்படும் 2025 ஆம் ஆண்டு உலக நீர் மேம்பாட்டு அறிக்கையானது யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியானது, உலகின் மிக உயரமான மலைகள் மற்றும் பரந்து விரிந்த பனிப்பாறை அமைப்புகளுக்கு முக்கியத் தாயகமாக உள்ளது, மேலும் இது பருவநிலை மாற்றத்தினால் அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய ஒன்றாக உள்ளது.
உருகும் பனிப்பாறைகள் ஆனது, உலகெங்கிலும் உள்ள 2 பில்லியன் மக்களின் உணவு மற்றும் நீர் விநியோகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இந்து குஷ் இமயமலை (HKH) பகுதியானது கடும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரிய அளவு இழப்புகளை எதிர் கொள்கிறது என்பதோடு, இது முந்தைய தசாப்தத்தை விட 2011-2020 ஆம் ஆண்டுகளில் 65 சதவீதம் வேகமாக உருகியது.
1.5°C மற்றும் 4°C வெப்பநிலைக்கு இடையில் அதிகரித்தால், உலகளவில் உள்ள மலை சார்ந்தப் பனிப்பாறைகள் 2015 ஆம் ஆண்டில் இருந்த நிலைகளுடன் ஒப்பிடும் போது 2100 ஆம் ஆண்டில் அவற்றின் மொத்த நிறைவில் சுமார் 26 முதல் 41 சதவீதம் வரையில் இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.