TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் அறிக்கை : Turning off the Tap

May 22 , 2023 553 days 272 0
  • இந்த அறிக்கையானது: 'Turn off the Tap: உலக நாடுகள் நெகிழி மாசுபாட்டினை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு சுழற்சிமுறைப் பொருளாதாரத்தை உருவாக்கலாம்' என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
  • உலக நாடுகளின் 80% நெகிழி மாசுபாடு ஆனது 2040 ஆம் ஆண்டிற்குள் குறைக்கப்படும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இது முதலில் சிக்கலான மற்றும் தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டினை குறைப்பதற்கு முன்மொழிந்தது.
  • இரண்டாவதாக, இந்த நெகிழிப் பொருட்களை மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மறு சீரமைத்தல் / பன்முகப் படுத்துதல் ஆகிய மூன்று முக்கியமானச் சந்தைச் சார்ந்த மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.
  • பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பொருட்களை வழங்கிப் பணம் பெறும் திட்டங்கள், மொத்தமாக வழங்குதல், நெகிழிப் பைகளைத் திரும்பப் பெறுதல் திட்டங்கள் மற்றும் மீண்டும் நிரப்பப்படும் வகையிலான குடுவைகள் போன்ற பல விருப்பத் தேர்வுகளை வழங்குவதன் மூலம் உலக நாடுகள் மறுபயன்பாடு என்ற ஒரு கருத்தாக்கத்தினை ஊக்குவிக்கலாம்.
  • இந்த முறைகள் மட்டுமே 2040 ஆம் ஆண்டிற்குள் நெகிழி மாசுபாட்டின் அளவை 30% குறைக்க முடியும்.
  • மறுசுழற்சிச் செயல்முறையை மிகவும் நிலையான மற்றும் இலாபகரமான வணிக வாய்ப்பாக மாற்றுவதன் மூலம் கூடுதலாக 20% மாற்றத்தை அடைய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்