அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ- காராபாக் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் குழு வந்தடைந்துள்ளது.
அஜர்பைஜான், பிரிந்த பகுதியினை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து கிட்டத் தட்ட ஒட்டுமொத்த ஆர்மேனிய இன மக்களும் அந்நாட்டிலிருந்துப் புலம் பெயர்ந்தனர்.
சுமார் 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு சர்வதேச அமைப்பு இப்பகுதிக்கு அதன் அணுகலைப் பெற்றுள்ளது.
முப்பது ஆண்டுகளாக இந்தப் பகுதியை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆர்மேனிய பிரிவினைவாதிகள், ஆயுதங்களை ஒப்படைத்து, தங்கள் அரசாங்கத்தைக் கலைத்து, அஜர்பைஜானுடன் மீண்டும் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
இந்த பிரிவினைவாத ஆர்மேனியர்கள் சர்வதேச அளவில் அஜர்பைஜான் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள காராபாக்கின் ஒரு பகுதியை தங்கள் மூதாதையர் தாயகமாக உரிமை கோருகின்றனர்.
2.8 மில்லியன் மக்கள் வாழும் ஆர்மேனியா, அகதிகளின் திடீர் வருகையால் பெரும் சவாலை எதிர்கொள்கிறது.