ஐக்கிய நாடுகள் சபையின் நீர்வள மேம்பாட்டு அறிக்கை 2023
March 29 , 2023 607 days 309 0
உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர்வள மேம்பாட்டு அறிக்கையானது வெளியிடப் பட்டது
2050 ஆம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தண்ணீர்ப் பற்றாக்குறையில் வாழும் மக்களில் 80 சதவீதத்தினர் ஆசிய நாடுகளில், குறிப்பாக வடகிழக்கு சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழச் செய்கின்றனர்.
உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் பேருக்குப் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை.
மேலும், 46 சதவீதம் பேருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை.
சராசரியாக, "உலக மக்கள்தொகையில் 10% பேர் அதிக அல்லது மோசமான தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் வாழ்கின்றனர்".
3.5 பில்லியன் மக்கள் வருடத்திற்குக் குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர்ப் பற்றாக் குறை நிலையின் கீழ் வாழ்கின்றனர்.
உலகளவில், 80% அளவிலான கழிவு நீர் சுத்திகரிக்கப்படச் செய்யமல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் வெளியிடப் படுகிறது.