TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அறிக்கை 2024

October 22 , 2024 32 days 118 0
  • சமூக மேம்பாட்டில் மகளிரின் பங்கு பற்றிய உலகளாவியக் கணக்கெடுப்பு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது "பாலின சமத்துவம், நெகிழ்திறன் மற்றும் மாற்றத்திற்காக சமூகப் பாதுகாப்பைப் பயன்படுத்துதல்" என்ற கருத்துருவில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த ஆய்வறிக்கையானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொருளாதார மற்றும் நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
  • உலகளவில் 63 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இன்றும் மகப்பேறு சலுகைகள் கிடைக்காமலேயே குழந்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் இந்த விகிதம் 94 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
  • 25 முதல் 34 வரையிலான வயதுடைய பெண்கள் அதே வயதுடைய ஆண்களை விட 25 சதவீதம் அதிகமாக வறுமையை எதிர்கொள்ளும் குடும்பங்களில் வாழ்கின்றனர்.
  • 171 நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் சுமார் 1,000 சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
  • ஆனால் இதில் சுமார் 18 சதவீத நடவடிக்கைகள் மட்டுமே பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பில் கவனம் செலுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்