TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்பானிய மொழி தினம் 2025 - ஏப்ரல் 23

April 29 , 2025 13 hrs 0 min 8 0
  • இத்தினமானது, ஸ்பானிய மொழியின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்துதல் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை உலக மக்களுக்கு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஸ்பானிய மொழியில் மிகப் புகழ்பெற்ற எழுத்தாளரான மிகுவல் டி செர்வாண்டஸ் சாவேத்ராவைக் கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஸ்பானிய மொழியானது ஸ்பெயின் நாட்டில் உருவானது.
  • தற்போது, ​​உலகில் 450 மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் உள்ளனர்.
  • சீன மொழிக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகம் பேசப்படும் மொழியாக ஸ்பானிய மொழி உள்ளது.
  • ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகம் படிக்கப்படும் மூன்றாவது மொழியாக ஸ்பானிய மொழி உள்ளது.
  • உலகில் சுமார் 75 மில்லியன் மக்கள் ஸ்பானிய மொழியை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்