ஐக்கிய நாடுகள் சாசனம் நடைமுறைக்கு வந்து 73வது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிப்பிடும் வகையில் அக்டோபர் 24ம் தேதி உலகம் முழுவதும் ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
1945ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்திய சாதனைகள் எல்லாவற்றையும் நினைவில் கொண்டு அனுசரிப்பதற்காக 1948ம் ஆண்டு முதல் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
2018ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் தின நிகழ்ச்சியானது நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள பொது அவைக் கூடத்தில் நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2018ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் தினத்தின் கருத்துரு “அமைதி மற்றும் அகிம்சைக்கான பாரம்பரியங்கள்” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் தினம் என்பது அக்டோபர் 20 முதல் 26 வரை கொண்டாடப்படும் ஐக்கிய நாடுகள் வாரத்தின் ஒரு பகுதியாகும்.