TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் படைப்பிரிவில் ஜெர்மனி

August 22 , 2024 93 days 107 0
  • ஜெர்மனி நாடானது, தென் கொரிய நாட்டில் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் படைப் பிரிவில் (UNC) இணைந்துள்ளது.
  • ஜெர்மனி இக்குழுவில் இணைந்த 18வது நாடாகும்.
  • UNC படைப்பிரிவானது, வட கொரியாவுடனான மிகவும் பலப்படுத்தப்பட்ட எல்லையில் காவல்துறைக்கு உதவுவதோடு போர்ச் சூழலின் போது தென் கொரியாவினை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது.
  • தற்போதைய UNC படைப்பிரிவின் உறுப்பினர்களுள், ஆஸ்திரேலியா, பிரிட்டன், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 1950-53 ஆம் ஆண்டு கொரியப் போரின் போது படைப்பிரிவுகளை அனுப்பின அல்லது மருத்துவ உதவியை வழங்கின.
  • 1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட UNC ஆனது வட கொரியாவுடன் ஒரு தொடர்பாடல் ஊடகமாகப் பணியாற்றும் அதே வேளையில் அமைதியை மீட்டெடுப்பதற்கும், போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்குமான பொறுப்பினையும் கொண்டுள்ளது.
  • இந்தப் படைப்பிரிவானது தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் படைத் தளபதியால் வழி நடத்தப் படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்