TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்

June 27 , 2019 1884 days 647 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UN Security Council - UNSC) தற்காலிக உறுப்பினராவதற்கு ஐக்கிய நாடுகளில் 55 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய – பசிபிக் குழுவில் உள்ள அனைத்து நாடுகளின் ஒருமித்த ஆதரவையும் இந்தியா பெற்றுள்ளது.
  • இந்தியா 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 2 ஆண்டு காலம் இப்பதவியை வகிக்கும்.
  • 1950-51 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர் நாடாக ஏற்கெனவே இந்தியா 7 முறை பதவி வகித்துள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மொத்தமுள்ள உறுப்பினர்களில் 5 தற்காலிக உறுப்பு நாடுகளை 2 ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றது.
  • சபையின் முடிவுகளை அதன் உறுப்பு நாடுகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற முறையில் உள்ள ஒரே ஐக்கிய நாடுகள் அமைப்பு இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்