TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையச் சீர்திருத்தங்களுக்கான கோரிக்கை

September 29 , 2020 1428 days 508 0
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது அமர்வின் போது காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினர்.
  • இவர்கள் சமகால நிகழ்வுகளை சிறந்த முறையில் பிரதிபலிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் முக்கியமான முடிவு எடுக்கும் அமைப்புகளை சீர்த்திருத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினர்.

கோரிக்கைகள்

  • இந்த ஆணையத்தில் இந்தக் குறிப்பிட்ட நாடுகளுக்கு நிரந்தர இடங்கள் அளிக்கப்பட வேண்டும்.
  • இந்த ஆணையத்தை முறையான, திறனுள்ள, பிரதிநிதித்துவம் உள்ளதாக மாற்றுவதற்கு வேண்டி ஐக்கிய நாடுகளுக்கு முக்கியமாகப் பங்களிக்கும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியோரின் மேம்பட்ட பங்கிற்கான தெளிவான தேவை உள்ளது.
  • குறைந்த அளவிலான பிரதிநிதித்துவம் தொடர்பாக முந்தைய காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்வதற்கு வேண்டி ஆப்பிரிக்காவிற்கு நிரந்தர மற்றம் நிரந்தரமற்ற பிரிவுகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றச் சீர்திருத்தங்களுக்காக குறிப்பிட்ட காலத்தில் எழுத்துப் பூர்வ அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்