ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள்
June 14 , 2023 531 days 292 0
அல்ஜீரியா, கயானா, கொரியக் குடியரசு, சியரா லியோன் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அல்பேனியா, பிரேசில், காபோன், கானா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பதிலாக இவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாகச் செயல்படும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது, 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் மற்றும் 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
அவற்றிற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப் படுவதோடு அந்த வாக்கெடுப்பில் போட்டியிடும் நாடுகள் மூன்றில் இரண்டு பங்கு என்ற ஒரு அளவில் பெரும்பான்மை அல்லது 128 வாக்குகளைப் பெற வேண்டும்.