TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது அமர்வு

October 6 , 2020 1421 days 621 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது அமர்வானது  2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-30 வரை காணொலி முறையில் நடத்தப்பட்டது.
  • இது துருக்கியின் வோல்கன் போஸ்கிர் என்பவரின் தலைமையின் கீழ், நியூயார்க் நகரிலிருந்து அமெரிக்காவினால் நடத்தப்பட்டது.
  • இந்த அமர்வின் கருத்துரு, “நமக்குத் தேவையான எதிர்காலம், நமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள், பல்தரப்பிற்கான நமது கூட்டு உறுதிப்பாடுகளை உறுதி செய்தல், திறன் வாய்ந்த பல்தரப்பு நடவடிக்கையின் மூலம் கோவிட் – 19 தொற்றை எதிர்கொள்தல்என்பதாகும்.
  • இந்த அமர்வின்போது, ஐக்கிய நாடுகளின் 75வது நினைவு தினத்தைக் குறிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று ஒரு சிறப்பு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த  நிகழ்வானதுநமக்குத் தேவையான எதிர்காலம், நமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள், பல்தரப்பிற்கான நம்முடைய கூட்டு உறுதிப்பாட்டை உறுதி செய்தல்என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் 75வது நினைவு தினத்தைக் குறிப்பதற்கான ஒரு பிரகடனமானது தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், பன்மைவாதத்தை சீர்திருத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கோவிட் – 19 கொள்ளை நோய் போன்ற சவால்களை எதிர் கொள்வதற்கான தயார் நிலை ஆகியவற்றிற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக வேண்டி நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்