TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இடங்கள்

October 20 , 2020 1408 days 552 0
  • சமீபத்தில் 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC - UN Human Rights Council) 15 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
  • UNHRC-ன் இடங்களுக்கு பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • பாகிஸ்தான் தற்பொழுது 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் UNHRC-ல் பணியாற்றி வருகின்றது.
  • இந்த மறுதேர்தலின் மூலம், பாகிஸ்தான் நாடானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் அடுத்து 3 ஆண்டுகளுக்கு அதன் உறுப்பினராகப் பணியாற்றும்.
  • 2006 ஆம் ஆண்டு UNHRC ஏற்படுத்தப் பட்டதிலிருந்து அந்நிறுவனத்திற்கு பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்படுவது இது 5வது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்