TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் மற்றும் இஸ்ரேல்

December 29 , 2020 1352 days 508 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA) 2020 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டின் மீது அதிக அளவு கண்டனங்களைச் சுமத்தியுள்ளது.
  • இது ஜெனீவாவில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பான UN கண்காணிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
  • UNGA ஆனது இந்த ஆண்டில் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக 17 தீர்மானங்களை ஏற்றுக் கொண்டது, ஆனால் UNGA மற்ற நாடுகளுக்கு எதிராக 6 தீர்மானங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டு உள்ளது.
  • வட கொரியா, ஈரான், சிரியா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு எதிராக தலா 1 தீர்மானமும் கிரீமியாவின் மீது 2 தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • UNGA தீர்மானங்கள் யாரையும் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல, ஆனால் இவை உலக அளவில் அடையாள ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • இந்த ஆண்டு தொடக்கத்தில், இஸ்ரேல் ஆனது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையகத்துடனான தனது உறவைத் துண்டித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்