TNPSC Thervupettagam

ஐக்கிய ராஜ்ஜியத்தின் புத்தாண்டு கௌரவப் பட்டியல்

January 4 , 2021 1347 days 625 0
  • ஏழு முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற லெவிஸ் ஹாமில்டனுக்கு ஐக்கிய ராஜ்ஜியத்தின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் வீரத்திருமகன் அல்லது நைட்ஹூட் என்ற பட்டமானது வழங்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் துருக்கி கிராண்ட் பிரிக்ஸில் ஹாமில்டன் தனது ஏழாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • இந்த வெற்றியின் மூலம், அவர் மைக்கேல் ஷூமேக்கரின் உலகச் சாதனையை சமன் செய்தார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மைக்கேல் ஷூமேக்கரின் ஒட்டு மொத்த சாதனையான 91 வெற்றிகளை சமன்  செய்து  அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம், அவரது மொத்த வெற்றியின் எண்ணிக்கை 95 ஆக உள்ளது.
  • இங்கிலாந்தின் நைட்ஹூட் மற்றும் டேம்ஹூட் கௌரவம் ஆனது இடைக் காலக் கட்டத்திற்கு முந்தையதாகும்.
  • இது ஆண்களுக்கு 'சர்' என்ற பட்டத்தையும் மற்றும் பெண்களுக்கு 'டேம்' என்ற பட்டத்தையும் கொண்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த  டாக்டர் ரகு ராம் பில்லாரிசெட்டியும்  இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்