ஐக்கியப் பேரரசின் பிரதமர் லிஸ் ட்ரஸ், வரிக் குறைப்பு நிதிநிலை அறிக்கை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
ட்ரஸ் வெறும் 44 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்த நிலையில், பிரிட்டிஷ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பணியாற்றியப் பிரதம மந்திரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
முன்னதாக, போரிஸ் ஜான்சன் ஜூலை மாதத் தொடக்கத்தில் அந்தப் பதவியினை ராஜினாமா செய்தார்.
தற்போது நிலவி வரும் பொருளாதாரத்தின் நிச்சயமற்றத் தன்மையானது, உலகின் ஆறாவது பெரியப் பொருளாதாரத்தின் சந்தைகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.