TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசு – இந்திய சமூகப் புதுமைக்கான சவால்

February 15 , 2019 2111 days 648 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐக்கியப் பேரரசு இந்திய சமூகப் புதுமைக்கான சவாலில் முதலாவது மற்றும் மூன்றாவது இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
  • இரண்டாவது இடம் ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அணிக்குச் சென்றது.
  • இந்த போட்டி ஐக்கியப் பேரரசு – இந்தியச் சமூகத் தொழில் முனைவோர் கல்விக்கான வலையமைப்பால் (UK India Social Entrepreneurship Education Network - UKISEEN) ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் அதன் இரண்டாவது பதிப்பு நடத்தப்பட்டது.
  • முன்னணியில் இடம்பெற்ற திட்டங்களாவன
    • முதல் இடம் – சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தி இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்.
    • இரண்டாவது இடம் – புதுமையான கார்பன் டை ஆக்சைடு பிரிப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானம் மற்றும் இடிபாடுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்தல்.
    • மூன்றாவது இடம் – புறஊதா ஒளிக்கதிர் மற்றும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மடிவன்தாள் (கிராப்ட்) லிக்னைனின் கிரியாவூக்கி சீரழிவு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்