மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐக்கியப் பேரரசு இந்திய சமூகப் புதுமைக்கான சவாலில் முதலாவது மற்றும் மூன்றாவது இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டாவது இடம் ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அணிக்குச் சென்றது.
இந்த போட்டி ஐக்கியப் பேரரசு – இந்தியச் சமூகத் தொழில் முனைவோர் கல்விக்கான வலையமைப்பால் (UK India Social Entrepreneurship Education Network - UKISEEN) ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் அதன் இரண்டாவது பதிப்பு நடத்தப்பட்டது.
முன்னணியில் இடம்பெற்ற திட்டங்களாவன
முதல் இடம் – சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தி இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்.
இரண்டாவது இடம் – புதுமையான கார்பன் டை ஆக்சைடு பிரிப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானம் மற்றும் இடிபாடுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்தல்.
மூன்றாவது இடம் – புறஊதா ஒளிக்கதிர் மற்றும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மடிவன்தாள் (கிராப்ட்) லிக்னைனின் கிரியாவூக்கி சீரழிவு.