ஐக்கியப் பேரரசு - இந்தியா புதிய தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பு
August 1 , 2024 114 days 124 0
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் இணைந்து தொலைத்தொடர்பு பாதுகாப்பை நன்கு உறுதி செய்யும் ஒரு நோக்கில் தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளன.
முக்கியக் கனிமங்கள், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் (துளிமம்) கணினியியல் மற்றும் சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளிலும் இது ஒத்துழைப்பினை மேற்கொள்ள வழி செய்கிறது.
இந்த முன்னெடுப்பானது, 2030 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள ஒத்துழைப்புச் செயல்பாட்டு நிரலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதோடு, இது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான ஒத்துழைப்பைக் கொண்டு வரும்.
இது தவிர, இந்திய அரசானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபையுடன் முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் (iCET) மீதான முன்னெடுப்பினையும் மேற்கொண்டுள்ளது.