TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசு – ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை நிதியம்

September 14 , 2023 310 days 219 0
  • வளர்ந்து வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளித்து எதிர்கொள்ள உதவும் வகையிலான பசுமை பருவநிலை நிதியத்திற்கு (GCF) 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளதாக பிரிட்டன் உறுதியளித்துள்ளது.
  • பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலக நாடுகளுக்கு உதவுவதற்காக ஐக்கியப் பேரரசு இன்று வரை செய்துள்ள மிகப்பெரிய ஒற்றை நிதி வழங்கீட்டு உறுதிப்பாடாக இது திகழும்.
  • உலகின் மிகப்பெரிய நிதியமான பசுமை பருவநிலை நிதியம் (GFC) ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகளின் கீழ் நிறுவப்பட்டது.
  • கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், தூய்மையான எரிசக்தி மூல ஆதாரங்களை உருவாக்குவதற்கும், வெப்பமயமாகி வரும் உலகிற்கு ஏற்றச் சூழலை அமைப்பதற்கும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு இது பயன்படும்.
  • ஏற்கனவே, 2021 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேசப் பருவநிலை நிதிக்காக 11.6 பில்லியன் பவுண்டுகள் (14.46 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை வழங்க பிரிட்டன் உறுதியளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்