ஐக்கியப் பேரரரசின் நாகா மண்டை ஓடு ஏலம் தொடர்பான சர்ச்சை
October 20 , 2024 33 days 71 0
ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த ஏல நிறுவனம் ஒன்று, நேரடி இயங்கலை ஏலங்கள் பட்டியலிலிருந்து ‘நாகா மனித மண்டை ஓட்டினை’ நீக்கியுள்ளது.
குறைந்தது 25 இதரப் பொருட்களுடன் சேர்த்து, பிரிட்டனில் ஏலத்திற்கென பட்டியலிடப் பட்ட சுமார் 200 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டையும் திரும்ப அளிக்குமாறு விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலங்குகளின் கொம்புகளைக் கொண்ட நாகா இன மனித மண்டை ஓடு ஆனது, குறிப்பாக மானுடவியல் மற்றும் பழங்குடிக் கலாச்சாரங்களில் மிகவும் ஆர்வமுள்ள கலைப் பொருட்கள் சேகரிப்பாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
இதில் ஆரம்பக் கட்ட ஏலத் தொகை சுமார் 23 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதன் இறுதி விலை சுமார் 43 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
ஆக்ஸ்போர்டில் உள்ள பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் சேகரிக்கப்பட்ட சுமார் 6,500 நாகா கலைப் பொருட்கள் உள்ளன.