TNPSC Thervupettagam

ஐக்யூஎம்பி (IQMP) மென்பொருள் செயலி- இந்திய ராணுவம்

November 6 , 2017 2554 days 782 0
  • இந்திய இராணுவம், இராணுவப் பிரிவின் பல்வேறு தளவாடங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை தானியங்குபடுத்துதலுக்கான மென்பொருள் செயலியான இன்டகிரேடட் குவார்டர் மாஸ்டர் பேக்கேஜ்ஜை (IQMP-Integrated Quarter Master Package) தொடங்கி வைத்துள்ளது.
  • ஐக்யூஎம்பி (IQMP) என்ற இணையம் சார்ந்த மென்பொருளை இந்திய இராணுவ மென்பொருள் மேம்பாட்டு மையம், TCS நிறுவனத்தோடு சேர்ந்து உருவாக்கியுள்ளது.
  • இந்தச் செயலியானது இராணுவப் பிரிவின் பல்வேறு தளவாடங்கள் தொடர்பான செயல்பாடுகளை தானியங்குப்படுத்தும். இந்தச் செயலியானது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த  மென்பொருள்களான ‘வஸ்த்ரா’ மற்றும் குவார்டர் மாஸ்டர் பேக்கேஜ் (Quarter Master Package) போன்றவற்றிற்கு மாற்றாக அமையும்.
  • இந்தச் செயலியானது இராணுவத்தின் பல்வேறு  பிரிவுகளின் குறிப்பிட்ட தேவைகளைப் சந்திக்கும்  வகையில் அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவல்லது.
  • இந்தச் செயலியானது தளவாடங்களின் நிர்வகித்தல் களத்துடன் தொடர்புடைய மற்ற மென்பொருள் செயலிகளுடன் தகவல் மட்டும் தரவைப் பகிர்ந்து கொள்ளும் திறனைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்