கனடாவின் பிரிவினைவாத தலைவர் ஹர்மீத் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட நிகழ்வில் இந்திய அரசாங்கத்திற்கு "சாத்தியமான தொடர்புகள்" இருக்கலாம் என்று கனடா கூறுகிறது.
இந்தப் பிரச்சினை "ஐங்கண் கூட்டணியின் பங்குதாரர்களிடையே பகிரப்பட்ட தகவல்" ஆகும்.
"ஐங்கண்" என்பது அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவுத்துறைப் பகிர்வுக் கூட்டணியைக் குறிக்கிறது.
1943 ஆம் ஆண்டில், ஐக்கியப் பேரரசு-அமெரிக்க (UKUSA) உடன்படிக்கையாக மாற்றப் பட்ட பிரிட்டன்-அமெரிக்கா (BRUSA) ஒப்பந்தத்தின் அடித்தளத்தை அமைத்தது.
ஐக்கியப் பேரரசு-அமெரிக்க (UKUSA) உடன்படிக்கையானது 1946 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
கனடா 1949 ஆம் ஆண்டிலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 1956 ஆம் ஆண்டிலும் இந்த அமைப்பில் இணைந்து ஐங்கண் கூட்டணியை உருவாக்கின.
2016 ஆம் ஆண்டில், ஐங்கண் புலனாய்வு மேற்பார்வை மற்றும் மறு ஆய்வுச் சபை உருவாக்கப்பட்டது.
இது ஐங்கண் கூட்டணியின் உறுப்பினர் நாடுகளின் அரசியல் சாராத உளவுத் துறை மேற்பார்வை, மறு ஆய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கியது.
அந்த நாடுகள் பரஸ்பர நலன்களைப் பரிமாறிக் கொண்டு, சிறந்த நடைமுறைகளை ஒப்பிட்டு, ஒவ்வோர் ஆண்டும் மாநாடுகளை நடத்துகின்றன.